மாவட்ட செய்திகள்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Communist Party of India Demonstration

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது.

திருப்பூர்,

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், காஷ்மீரில் 370–வது பிரிவை நீக்கியதை கண்டித்து மாவட்ட செயலாளர் ரவி பேசினார். காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பழனிசாமி, சேகர், செந்தில், வடிவேல், காட்டே ராமசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. லடாக் ஏரி பகுதியில் இந்திய- சீன வீரர்கள் மோதல்: இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது
நமது வீரர்கள் நமது எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இரு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இருதரப்பு கூட்டத்திற்கு பிறகு பிரச்சினை ஓய்ந்தது என தகவல் வெளியாகி உள்ளது.
2. ‘இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர்’ - பாகிஸ்தான் மந்திரி குரேஷி சொல்கிறார்
இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர் என பாகிஸ்தான் மந்திரி குரேஷி கூறினார்.
3. இமாசலபிரதேசம், காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
இமாசலபிரதேசம், காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. ‘அணு ஆயுதம் ஏந்திச்சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது’ - நள்ளிரவில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
அணு ஆயுதங்களை ஏந்திச்சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் நடத்தி உள்ளது.
5. இந்தியாவிற்கு வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - பாகிஸ்தான்
இந்திய விமானங்களுக்கு தங்கள் வான்வழியை மூடுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை