மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,450 போலீசார் + "||" + In honor of Independence Day, 1,450 cops in security work across the district

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,450 போலீசார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,450 போலீசார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விமான நிலையம், ரெயில் நிலையம், முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த 5-ந் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக வந்த 1,600 மத்திய துணை ராணுவப்படையினர் வேலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இப்பணியில் வருகிற 31-ந் தேதி வரை ஈடுபட உள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், விஜயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகளவு வருகை தரும் வேலூர் கோட்டை, வழிபாட்டு தலங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்யப்பட உள்ளன. இந்த பணிகளில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபடுவார்கள்.

மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்
குமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
2. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை
15 வருடங்களாக சம்பளம் கிடைக்காத வேதனையில், ஆசிரியர் ஒருவர் சுதந்திர தினத்தன்று தற்கொலை செய்து கொண்டார்.
3. கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து, முதல்-அமைச்சர் பங்கேற்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் கிரண்பெடி, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
4. ஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது: பிரதமர் மோடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை அரசு துடைக்கும் என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
5. நாட்டின் 73-வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று தேசம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.