மாவட்ட செய்திகள்

சாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் + "||" + 28 motorcyclists arrested for transporting 3 motorcycles, including 3 women

சாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேர் கைது 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சாராயம் கடத்திய 3 பெண்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலில் ஈடுபடுவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது சாராயம் கடத்தி வந்ததாக பாப்பாகோவில் மதகடி தெருவை சேர்ந்த அஞ்சம்மாள் (வயது 40), சீர்காழி முதலைதிட்டு பகுதியை சேர்ந்த உமா (38), அளக்குடி மணியாற்று தெருவை சேர்ந்த இந்திரா (38) உள்பட 28 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 ஆயிரத்து 65 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள் களையும் பறிமுதல் செய்தனர்.