அறந்தாங்கி வாகன உதிரி பாக விற்பனை கடையில் தீ விபத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


அறந்தாங்கி வாகன உதிரி பாக விற்பனை கடையில் தீ விபத்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 5:35 PM GMT)

அறந்தாங்கியில் உள்ள வாகன உதிரி பாக விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

அறந்தாங்கி,

புதுக்கோட்டையை சேர்ந்த திருவேங்கடம். இவர் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் உள்ள வாடகை கடையில் லாரி, இச்சேர், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு தேவையான ஆயில், கிரீஸ் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு உள்ளே இருந்து தீப்பிடித்து எரிந்து புகை வந்தள்ளது. இதைப்பார்த்த கடைக்கு அருகே இருந்தவர்கள் அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மாவட்ட நிலைய அலுவலர் செழியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

இதையடுத்து ஆவுடையார் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இதில் கடையில் இருந்த நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் கிரீஸ் உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story