சோலாப்பூரில் உள்கட்டமைப்பு பணி மும்பை-தமிழக ரெயில்கள் ரத்து: நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கொங்கன் வழியாக இயக்கப்படுகிறது


சோலாப்பூரில் உள்கட்டமைப்பு பணி மும்பை-தமிழக ரெயில்கள் ரத்து: நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கொங்கன் வழியாக இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 17 Aug 2019 5:39 AM IST (Updated: 17 Aug 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

சோலாப்பூரில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மும்பை - தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் சோலாப்பூர் கோட்டத்தில் வாட்சிங்கே - பால்வானி இடையே உள்கட்டமைப்பு பணிகள் நேற்று தொடங்கியது. இந்த பணிகள் வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி சில தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மாற்று வழியாக இயக்கப்பட உள்ளன. அதன்விவரம் வருமாறு:-

வருகிற 18 மற்றும் 23-ந் தேதி எல்.டி.டி.யில் இருந்து புறப்பட இருந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:11013) ரத்து செய்யப்பட்டுள்ளது.

20 மற்றும் 25-ந் தேதி கோவையில் இருந்து எல்.டி.டி.க்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11014) ரத்து செய்யப்பட்டுள்ளது. 23-ந் தேதி இயக்கப்பட இருந்த எல்.டி.டி. - மதுரை எக்ஸ்பிரஸ் (11043), 17,14-ந் தேதி இயக்கப்பட இருந்த மதுரை - எல்.டி.டி. எக்ஸ்பிரஸ், 22-ந் தேதி இயக்கப்பட இருந்த தாதர்-சென்னை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12163), 17,24-ந் தேதி இயக்கப்பட இருந்த சென்னை - தாதர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12164), 18,22-ந் தேதி இயக்கப்பட இருந்த சென்னை - ஆமதாபாத் எக்ஸ்பிரஸ் (19419), 17,21-ந் தேதி இயக்கப்பட இருந்த ஆமதாபாத் - சென்னை எக்ஸ்பிரஸ் (19420), 23-ந் தேதி இயக்கப்பட இருந்த சாய்நகர் ஷீரடி - சென்னை எக்ஸ்பிரஸ் (22602), 21-ந் தேதி இயக்கப்பட இருந்த சென்னை - சாய்நகர்ஷீரடி எக்ஸ்பிரஸ் (22601) ஆகிய ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல 19, 20, 21, 23 ஆகிய தேதிகளில் நாகர் கோவில் - சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (16340) மதுரை, திண்டுக்கல், பால்கத், சொர்னவூர், தோகுர், ரோகா, பன்வெல் வழியாக இயக்கப்படும். 18, 21, 22, 23 ஆகிய தேதிகளில் சி.எஸ்.எம்.டி. - நாகர்கோவில் ரெயில் (16339) பன்வெல், ரோகா, தோகுர், சொர்னவூர், பால்கத், திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும்.

18, 22 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் - சி.எஸ்.எம்.டி. ரெயில் (16352) மதுரை, திண்டுக்கல், பால்கத், சொர்னவூர், தோகுர், ரோகா, பன்வெல் வழியாக இயக்கப்படும். 17, 20, 24 ஆகிய தேதிகளில் சி.எஸ்.எம்.டி. - நாகர்கோவில் ரெயிலும் இதே வழிப்பாதையில் இயக்கப்படும்.

இந்த தகவல்களை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story