மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை + "||" + Police investigation into sudden death of an adolescent in Nagercoil

நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை

நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்,

சென்னை கூடுவாஞ்சேரி மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவருக்கும், நாகர்கோவில் அருகே ஆளூர் வீராணியை சேர்ந்த திவ்யா என்ற கோகிலா (வயது 26) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.


இந்த நிலையில் திவ்யா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பிரசவத்துக்காக வீராணியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்தார். திவ்யாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி வந்தது. இதனையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சாவு

ஆனால் பிரசவத்துக்கு பின்னர் திவ்யாவுக்கு ரத்த போக்கு அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் திவ்யா பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவத்துக் காக அனுமதிக்கப்பட்ட திவ்யா திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்லுக்கு பிளஸ்-2 வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டன 10 மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
நாமக்கல்லுக்கு நேற்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வினாத்தாள்கள் லாரி மூலம் கொண்டு வரப்பட்டன. இவை வைக்கப்பட்டு உள்ள 10 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
2. இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான ஊழல் வழக்குகள்; மார்ச் 17ல் விசாரணை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் பற்றிய விசாரணை மார்ச் மாதம் 17ந்தேதி தொடங்கும்.
3. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கணவர் கைது
தாத்தா சொத்தை கொடுக்க தந்தை மறுப்பதாக கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
4. திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை
திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனை? அதிகாரிகள், போலீசார் விசாரணை
திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனையா? என அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.