இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற அனைவருக்கும் வீடு கட்டி தர நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேச்சு


இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற அனைவருக்கும் வீடு கட்டி தர நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேச்சு
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 7:09 PM GMT)

இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற அனைவருக்கும் வீடு கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

நன்னிலம்,

நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி வாசலில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை அமைச்சர் காமராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாப்பிள்ளைகுப்பத்தில் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் திறந்து வைத்தார்.

வீடு கட்ட நடவடிக்கை

பின்னர் மாப்பிள்ளைகுப்பம் திருமண மண்டபத்தில் 103 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலவச வீட்டு மனைப்பட்டா பெற்ற அனைவருக்கும் வீடு கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உங்கள் தேவைகள் ஏதுவாக இருந்தாலும் பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் அன்பு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால், கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன், செந்திலன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story