மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்: யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா + "||" + Today Aavani festival in Thiruchendur Flag Hoist

திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்: யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா

திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா கொடியேற்றம்: யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
திருச்செந்தூர், 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. முன்னதாக திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பரதாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு தீபாராதனை நடந்தது.

பின்னர் சங்கரநாராயண அய்யர் கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு, தெய்வானை யானை மீது அமர்ந்து, எட்டு வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தார்.

விழாவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், மாரிமுத்து, ஆய்வாளர் முருகன், 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை அபிவிருத்தி சங்க இணை தலைவர் மாரிமுத்து, பொருளாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் நாளான வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
திருச்செந்தூரில் மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய சித்தப்பா அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. திருச்செந்தூரில் பிரமாண்ட விழா மணிமண்டபத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு புகழாரம் ‘பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்’
திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், பா.சிவந்தி ஆதித்தனார் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
4. திருச்செந்தூரில் இன்று தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (சனிக்கிழமை) தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காவடி எடுத்து, அலகு குத்தியும், பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
5. திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் மறியல் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரிக்கை
சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றக்கோரி, திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.