இணையதள வசதியுடன், மடிக்கணினி வழங்க வேண்டும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


இணையதள வசதியுடன், மடிக்கணினி வழங்க வேண்டும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:15 AM IST (Updated: 21 Aug 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

இணையதள வசதியுடன் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அருள் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில தணிக்கையாளர் ராபர்ட்பெல்லார்மென், மாநில துணைத்தலைவர் சொர்ணராஜன், மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில பொருளாளர் சிவந்திராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

குத்தகை சாகுபடியாளர்கள், கோவில் நிலச்சாகுபடியாளர்கள் நுண்நீர் பாசன திட்டத்தில் பயன்பெறும் வகையில், நீர் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.

சம்பா சாகுபடி மட்டுமே செய்யக்கூடிய சூழ்நிலையில் உயிர் உரங்கள் வினியோக இலக்கை மாற்றி அமைக்க வேண்டும். அரசு விதை பண்ணைகளில் உதவி விதை அலுவலர் பதவி இடத்தை உருவாக்க வேண்டும்.

வேளாண்மை துணை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்களின் பணிகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும், நிறைய பணிகளின் அறிக்கைகள் கணினி மூலம் தட்டச்சு செய்ய வேண்டியுள்ளதாலும், அனைத்து அலுவலர்களுக்கும் இணையதள வசதியுடன் கூடிய மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story