சூலூர் பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது - 35 பவுன் நகை பறிமுதல்


சூலூர் பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது - 35 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 1 Sep 2019 10:30 PM GMT (Updated: 1 Sep 2019 9:17 PM GMT)

சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 35 பவுன்நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூலூர்,

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏர்போர்ஸ் டிவைன் காலனி, ரிலையன்ஸ் கார்டன் மற்றும்அதைச்சுற்றியுள்ளபகுதிகளில்நகை பறிப்புமற்றும்நகை திருட்டு சம்பவங்கள்தொடர்ந்து நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ்சூப்பிரண்டு சுஜித்குமார்உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டிஉட்கோட்ட துணைபோலீஸ்சூப்பிரண்டு பாலமுருகன்மேற்பார்வையில், சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில்கோவை-திருச்சி சாலையில்காங்கேயம்பாளையத்தில் சூலூர்சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தலைமையிலான போலீசார்வாகன சோதனையில்ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாகமோட்டார் சைக்கிளில்வந்த ஒருவரைதடுத்திநிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின்முரணாக பதில்கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்அவரை சூலூர்போலீஸ்நிலையத்துக்கு கொண்டு சென்றுவிசாரணை நடத்தினர். இதில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடுபகுதியை சேர்ந்தமுகமதுஎன்பவரதுமகன்ஷாலு(வயது33) என்பதும், கடந்த சிலமாதங்களாக சூலூர்மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்நகை பறிப்புமற்றும்திருட்டு சம்பவங்களில்ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது.இதைதொடர்ந்துஅவரை போலீசார்கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 35 பவுன்நகை பறிமுதல்செய்யப்பட்டது.

இந்தநகை திருட்டு சம்பவங்களில்வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்துஷாலுவைசூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்புஆஜர்படுத்தி கோவைமத்திய சிறையில்அடைத்தனர்.

Next Story