ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது


ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2019 4:51 AM IST (Updated: 25 Sept 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

தானே,

நவிமும்பை பகுதியில் உள்ள மதுபான பாரில் ஒலி எதிர்ப்பு தர சான்றிதழ் பெற அதன் மேலாளர் அங்குள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த ஜூனியர் என்ஜினீயர் வினோத் காம்பிரே (வயது35) என்பவர் தனக்கு ரூ.80 ஆயிரம் தந்தால் அதற்கான சான்றிதழ் தருவதாக தெரிவித்தார். இதற்கு பார்மேலாளர் ரூ.70 ஆயிரம் தருவதாக கூறி விட்டு தானே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார், யோசனைப்படி ரசாயனபொடி தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை ஜூனியர் என்ஜினீயர் வினோத் காம்பிரே பெற்ற போது அவரை கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story