பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் அடைய வேண்டும் வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்
பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் அடைய வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறினார்.
திருவாரூர்,
வேளாண்மை துறை மூலம் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் 2019-20-ம் ஆண்டு காரீப் பருவத்திற்கான பயிர்க்காப்பீடு காலம் முடிந்துள்ளது. எனினும் சம்பா மற்றும் ராபி பருவத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் வருவாய் கிராம அளவில் சம்பா, உளுந்து, பருப்பு பாசிப்பயறு, நிலக்கடலை மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு செய்ய அறிவிக்கை வர உள்ளது. அறிவிக்கை செய்யப்படும் பயிர்களை பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சோளம், பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் திட்டத்தில் கட்டாயம் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
மானிய தொகை
பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண்சரிவு வெள்ளம் போன்ற உள்ளுர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு போன்ற வற்றுக்கும் பயிர்க்காப்பீடு வழங்கப்படும். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டு தொகை பிரீமியம் தொகை மற்றும் அதற்கான மானிய தொகை கிடைக்கும். நடப்பாண்டில் சம்பா, தாளடி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.465 பிரீமியம் செலுத்த வேண்டும்.
பயன்அடைய வேண்டும்
மேலும் விவசாயிகள் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைய வேளாண்துறையின் அறிவிப்புக்கு பின் பொது சேவை மையங்கள், தேசிய வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விவசாயிகள் முன் கூட்டியே பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம். முன்பொழிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றுடன் விண்ணப்பிக்கலாம். எனவே இத்திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் சேர்ந்து பயன் அடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story