மாவட்ட செய்திகள்

நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை + "||" + Namakkal Private School, Income Tax Exam at 3rd Need Training Center

நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை

நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை
நாமக்கல் தனியார் பள்ளி மற்றும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. இதில் ரூ.150 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்,

நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி நிர்வாகம் சார்பில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இப்பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அது தொடர்பான கணக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படுவது இல்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து கடந்த 11-ந் தேதி நாமக்கல்லில் உள்ள பள்ளி அலுவலகம், பள்ளி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் ‘நீட்’ பயிற்சி மையங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ‘நீட்’ தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு முறையான ரசீது வழங்கவில்லை என்பது தெரியவந்தது.

ரூ.150 கோடி

2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் வங்கி லாக்கர் மற்றும் பள்ளியின் கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.30 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 3-வது நாளாக நீடித்தது. மேலும் இந்த குழுமம் சுமார் ரூ.150 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில், இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் எவ்வளவு? வரி ஏய்ப்பு எவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது? என்பது தொடர்பான துல்லியமான விவரம் டெல்லியில் இருந்து வெளியிடப்படும் என சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை மத்திய சிறையில் போலீசார் தீவிர சோதனை
மதுரை மத்திய சிறையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
2. தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
தென்னிலை அருகே தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ரெயில்களில் அதிரடி சோதனை
அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக வழிபாட்டு தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
4. நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை
சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்வி குழுமத்தில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.