மாவட்ட செய்திகள்

திருமுல்லைவாசல் பகுதியில் கடலில் சிக்கும் சிறிய வகை மீன்கள் மீனவர்கள் வேதனை + "||" + In the Tirumalavaivasal area Fishermen suffer from small fish caught in the sea

திருமுல்லைவாசல் பகுதியில் கடலில் சிக்கும் சிறிய வகை மீன்கள் மீனவர்கள் வேதனை

திருமுல்லைவாசல் பகுதியில் கடலில் சிக்கும் சிறிய வகை மீன்கள் மீனவர்கள் வேதனை
திருமுல்லைவாசல் பகுதியில் கடலில் சிக்கும் சிறிய வகை மீன்களில் போதிய வருமானம் கிடைக்காததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சீர்காழி,

சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுக பகுதியில் இருந்து திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையாறு உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கட்டுமரங்கள் ஆகியன மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் வலையில் சிறிய வகை மீன்கள் சிக்குகின்றன.


இதனால் மீனவர்கள், தங்களது வலையில் சிக்கும் சிறிய வகையான கனவாய் மீன்கள், வாலை மீன்களை பிடித்து கொண்டு ஏமாற்றத்துடன் கரை திரும்புகின்றனர். இந்த வகை மீன்களை தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இந்த வகை மீன்களில் போதிய அளவு வருமானம் கிடைப்பதில்லை என்று மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

போதுமான வருமானம்

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் கடலில் சிறிய வகை மீன்களே சிக்குகின்றன. இந்த வகை மீன்களில் போதிய வருமானம் கிடைக்காது. படகுகளுக்கு ஊற்றப்படும் டீசலுக்கு ஆகும் செலவுகளை சரிசெய்யும் அளவுக்கு கூட பெரியவகை மீன்கள் சிக்குவதில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் இயற்கை சீற்றத்தால் மேலும் மீன்பிடி தொழில் பாதிக்கும் அபாய நிலை உள்ளது. நாங்கள் மீன்பிடி தொழிலேயே நம்பி இருப்பதால் போதுமான வருமானம் கிடைக்காமல் அவதிப்படுகிறோம் என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யம் அருகே, படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
வேதாரண்யம் அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
2. சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி 20 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்
சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி 20 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3. கவர்னர் கிரண்பெடியை கண்டித்து கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம்
கவர்னர் கிரண்பெடியை கண்டித்து கடலில் இறங்கி மீனவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
4. மண்டபத்தில் பழுதாகி கிடக்கும் கடலோர போலீஸ் ரோந்து படகுகள் இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டு
மண்டபத்தில் பல மாதங்களாக கடலோர போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து படகுகள் பழுதாகி கிடக்கின்றன. இவை இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
5. கடலில் மூழ்கியவரை ஹெலிகாப்டர் மூலம் தேட வலியுறுத்தி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
கடலில் மூழ்கியவரை ஹெலிகாப்டர் மூலம் தேட வலியுறுத்தி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.