தனியார் மின் உற்பத்தி நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை திட்டச்சேரி அருகே பரபரப்பு


தனியார் மின் உற்பத்தி நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை திட்டச்சேரி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே நரிமணம் ஊராட்சியில் தனியார் மின்உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாகவும், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி சுள்ளாங்கால் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மின்உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரால் விளை நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டு மண்ணின் வளம் குறைவதாகவும், காது கேளாமை, மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

பேச்சுவார்த்தை

மேலும் இந்த மின் உற்பத்தி நிலையம் மூலமாக கிராம பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படவில்லை என்பதால் மின் உற்பத்தி நிலையம் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கோ‌‌ஷம் எழுப்பினர். கிராம மக்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற் பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story