தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்; இன்று புறப்படுகிறது


தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்; இன்று புறப்படுகிறது
x
தினத்தந்தி 25 Oct 2019 11:00 PM GMT (Updated: 25 Oct 2019 7:02 PM GMT)

தீபாவளி பண்டிகையை யொட்டி கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) இரவு புறப்படுகிறது.

கோவை,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவையில் இருந்து சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06017) சென்னை வழியாக மேற்கு வங்காளத்துக்கு புறப்பட்டு செல்கிறது.

இன்று (சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படுகிறது. திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் சென்றடைகிறது. 3-ம் வகுப்பு குளிர்சாதன வசதி ஒரு பெட்டி, படுக்கை வசதிபெட்டி 7, இரண்டாம் வகுப்பு உட்கார்ந்து பயணம் செய்யும் பெட்டிகள் 2, பொது இரண்டாம் வகுப்பு பெட்டி-6, சரக்கு பெட்டிகள்-2 உள்பட மொத்தம் 18 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், துவ்வாடா, சிமாச்சலம், கொட்டவலசா, விளியநகரம், ஸ்ரீரிகாகுலம், பலசா, சோம்பேடா, பிரஹ்மாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், மரதாபூர், பாத்ரக், பலோசோர், ஹிஜி, மணிடாபூர், பங்குரா வழியாக சென்று மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல்லை சென்றடைகிறது.

Next Story