வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.48½ லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது


வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.48½ லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2019 10:45 PM GMT (Updated: 7 Nov 2019 7:34 PM GMT)

வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.48½ லட்சம் மோசடிசெய்த நகைமதிப்பீட்டாளர் கைதுசெய்யப்பட்டார்.

கோவை,

கோவைஎஸ்.எஸ்.குளம் பகுதியை சேர்ந்தவர்லோகேஷ்(வயது 40). இவர் கடந்த 10ஆண்டுகளுக்கும்மேலாக கோவை கணபதியில்உள்ள ஒரு வங்கியில் தங்க நகைமதிப்பீட்டாளராக பணியாற்றிவந்தார்.

இந்தநிலையில்இவர் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக வங்கியின் முதன்மை மேலாளர்பாலகிருஷ்ணன் கோவை மாநகர குற்றப்பிரிவுபோலீசில்புகார் அளித்தார்.

புகாரின் பேரில் குற்றப்பிரிவுபோலீசார் லோகேஷ்மீதுவழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில்லோகேஷ்கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரைஉள்ள காலங்களில்வங்கிக்கு நகைகளை அடகு வைக்க வந்த 10-க்கும்மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று உள்ளார்.

அதன் மூலம் 3 ஆயிரத்து196 கிராம் போலி நகைகளை வாடிக்கையாளர்களின் பெயர்களில் வங்கியில் அடகு வைத்துரூ.48 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்ததுதெரியவந்தது. இதையடுத்து கோவைமாநகர போலீஸ்கமிஷனர்சுமித்சரண்உத்தரவின்பேரில்துணை கமிஷனர்பாலாஜிசரவணன்மேற்பார்வையில்உதவி கமிஷனர்சவுந்திரராஜன்தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்மல்லிகா,சப்-இன்ஸ்பெக்டர்கள்ரேணுகாதேவி, ஜமுனாமற்றும்போலீசார்லோகேசைநேற்று கைதுசெய்தனர்.

பின்னர்அவரை கோர்ட்டில்ஆஜர்படுத்தி கோவைமத்திய சிறையில்அடைத்தனர்.

வாடிக்கையாளர்களின் பெயரில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்துரூ.48½ லட்சம் மோசடி செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story