என்.ஜி.ஓ. காலனி அருகே 10–ம் வகுப்பு மாணவன் கடத்தல் போலீசார் விசாரணை


என்.ஜி.ஓ. காலனி அருகே 10–ம் வகுப்பு மாணவன் கடத்தல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2019 11:00 PM GMT (Updated: 10 Nov 2019 3:43 PM GMT)

நாகர்கோவில் அருகே 10–ம் வகுப்பு மாணவனை கடத்தி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

என்.ஜி.ஓ.காலனி அருகே மணிக்கட்டி பொட்டல் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை, கொத்தனார். இவரது மகன் பால்ராஜ் (வயது 16). இவர் நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

பால்ராஜின் மாமா ரெங்கசாமியின் வீடு ஈத்தாமொழி அருகே மங்காவிளையில் உள்ளது. பால்ராஜ், மாமா வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் 2 அல்லது 3 நாட்கள் தங்கிவிட்டு வருவது வழக்கம்.

கடத்தல்

சம்பவத்தன்று பால்ராஜ், மாமா வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சைக்கிளில் சென்றார். ஆனால், 4 நாட்கள் கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அய்யாத்துரை, ரெங்கசாமி வீட்டுக்கு சென்று மகனை குறித்து கேட்டார். அப்போது, மாணவன் அங்கு வரவில்லை என்று உறவினர்கள் கூறினர். இதுபற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, மர்ம கும்பல் பால்ராஜை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அய்யாத்துரை சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், மாணவனை கடத்தி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story