விழுப்பனூரில் இருந்து பிரித்து கிருஷ்ணன்கோவிலை ஊராட்சியாக்க கோரி ஆர்ப்பாட்டம்


விழுப்பனூரில் இருந்து பிரித்து கிருஷ்ணன்கோவிலை ஊராட்சியாக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2019 10:15 PM GMT (Updated: 27 Nov 2019 8:02 PM GMT)

விழுப்பனூரில் இருந்து கிருஷ்ணன்கோவிலை பிரித்து ஊராட்சியாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்பனூர் ஊராட்சியில் அமைந்துள்ள கிருஷ்ணன்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களும் கல்லூரி மாணவர்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு வாருகால், தெருவிளக்கு, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை.

இருக்கின்ற தெருவிளக்குகளும் பழுதாகி போனதால் திருட்டு சம்பவங்களும் அதிகரிக்கிறது. எனவே கிருஷ்ணன்கோவில் பகுதியை விழுப்பனூர் ஊராட்சியில் இருந்து பிரித்து கிருஷ்ணன்கோவில் தலைமையில் ஊராட்சி அமைக்க பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை வலியுறுத்தியும், அங்கு ரேஷன் கடை திறக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணன்கோவிலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் தொடங்கி வைத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கோவிந்தன், மகாலிங்கம், பலவேசம், மூர்த்தி, ராஜாங்கம்,பாட்டகுளம் ஊர் நாட்டாண்மை கடற்கரை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story