தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் பள்ளி மாணவர் மாநில மாநாட்டில் தீர்மானம்


தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் பள்ளி மாணவர் மாநில மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 8:21 PM GMT)

தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவர் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர் மாநில கோரிக்கை மாநாடு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாணவர் சங்க மாநிலக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சிவஸ்ரீ ரமேஷ் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் உப குழு ஒருங்கிணைப் பாளர் சந்துரு அறிக்கை வாசித்தார்.

வரவேற்புக்குழு கவுரவ தலைவர் மனோகர் ஜஸ்டஸ், பொருளாளர் நாகராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் நிரூபன் சக்கரவர்த்தி, ஜான்சிராணி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில துணைத்தலைவர்கள் கண்ணன் திலீபன், இணைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர்.

சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மணிக்குமார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் நிறைவுரையாற்றினார். முடிவில் வரவேற்புக்குழு செயலாளர் பிரஸ்கில் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். 2019 தேசிய புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அரசுப்பள்ளிகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகள் ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.


Next Story