ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் மழை - திருவலத்தில் 11 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி


ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் மழை - திருவலத்தில் 11 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 Dec 2019 1:30 PM GMT (Updated: 2 Dec 2019 1:15 PM GMT)

ராணிப்பேட்டை, சிப்காட் பகுதியில் மழை மழை பெய்தது. இதனால் திருவலத்தில் 11 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை, சிப்காட், பொன்னை, மேல்பாடி, திருவலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை 10 மணி வரையில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இந்த மழையின் மூலம் ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பினால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும். நீர்நிலைகள் நிரம்புவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திருவலம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை 9 மணி அளவில் தான் மின்வினியோகம் செய்யப்பட்டது. சுமார் 11 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து மின் வாரியத்தில் விசாரித்த போது திருவலம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

Next Story