தண்டவாள பராமரிப்பு பணி: திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து


தண்டவாள பராமரிப்பு பணி: திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து
x
தினத்தந்தி 4 Dec 2019 11:00 PM GMT (Updated: 4 Dec 2019 6:48 PM GMT)

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி-தஞ்சாவூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி-தஞ்சாவூர்-திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 76824/76827) வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) சேவை ரத்து வருகிற 31-ந் தேதி வரை தொடருகிறது.

திருச்சியில் இருந்து தினமும் பகல் 12.50 மணிக்கு மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் சிறப்பு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (06030) தொடர்ந்து வருகிற 31-ந்தேதி வரை இயக்கப்படும். இந்த ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும்.

நெல்லை பயணிகள் ரெயில்

இதேபோல வருகிற 31-ந் தேதி வரை மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் ரெயில் (56821) ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்கள் திருச்சிக்கு 25 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். மேலும் நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (56822) மயிலாடுதுறைக்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து வருகிற 14-ந் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு புதுச்சேரிக்கு தாமதமாக சென்றடையும்.

மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story