மேட்டூர் அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர் - துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி


மேட்டூர் அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர் - துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 2019-12-11T23:30:33+05:30)

மேட்டூர் அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகி்ன்றனர்.

மேட்டூர், 

இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணை 4 முறை நிரம்பி உள்ளது. கர்நாடக மாநில காவிரி ஆற்றில் இருந்து ஒகேனக்கல் வழியாக இந்த அணைக்கு வரும் தண்ணீரானது, கடந்த சில மாதங்களாக கழிவு நீர் கலந்து வருவதால் பச்சை நிறமாக மாறி உள்ளது.

குறிப்பாக கடந்த மாதம் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதிகளான கோட்டையூர், பண்ணவாடி, சேத்துக்குளி ஆகிய பகுதிகளில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசியது. இதனால் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் ெதளிப்பான், துர்நாற்றம் வீசிய பகுதிகளில் தெளிக்கப்பட்டது. இதனிடையே பச்சை நிறமாக மாறிய இந்த தண்ணீர் படிப்படியாக மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. இதனால் அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் இங்குள்ள 16 கண் பாலம் பகுதிக்கு இந்த தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் 16 கண் பாலம் பகுதியில் தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக 16 கண் பாலம் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பாலம் அருகே ெசல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிைல ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்கமாபுரி பட்டணம், ேசலம் கேம்ப் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதை தடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். இந்தநிலையில் 16 கண்பாலத்தில் இருந்து உபரிநீர்வெளியேறும் பாதையில் ஆங்காங்கே பச்சை நிற தண்ணீர் குட்டை போல் தேங்கி உள்ளது.

மேட்டூர் நகராட்சி சார்பில் நேற்று குட்டை போன்று தேங்கி உள்ள பச்சை நிற தண்ணீரில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் தெளிப்பான் தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story