மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் கடைகளை அடைத்து உண்ணாவிரதம் + "||" + Playankottai Bus station merchants The stores are clogged Fasting

பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் கடைகளை அடைத்து உண்ணாவிரதம்

பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் கடைகளை அடைத்து உண்ணாவிரதம்
பாளையங்கோட்டை பஸ்நிலைய வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, 

பாளையங்கோட்டை பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 52 கடைகள் உள்ளன. மேலும் 5-க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பஸ்நிலைய கடைகளை அகற்றி விட்டு, புதிய கடைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் அந்த பகுதியில் வணிக வளாகம் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பஸ்நிலைய கடைகளை காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடைகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும், தங்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு கடைகளை இடிக்க வேண்டும், புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ள னர். இதுதொடர்பாக வியாபாரிகள் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பாவிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் பாளையங்கோட்டை பஸ்நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். செயலாளர் அமிர்தராஜ் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட அனைத்து உள்ளாட்சி கடைகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாலைராஜா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, நெல்லை வியாபாரிகள் சங்க தலைவர் சுப்பிரமணியன், மாநகர தலைவர் குணசேகரன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ரசூல்மைதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட அனைத்து உள்ளாட்சி கடைகள் கூட்டமைப்பு தலைவர் சாலமோன் நிறைவுரை ஆற்றினார்.

போராட்டத்தில் பாளையங்கோட்டை பஸ்நிலைய பொருளாளர் சேக்முகமது, மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் ராமகிரு‌‌ஷ்ணன், பொருளாளர் மீரான் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வியாபாரிகள் சங்க உண்ணவிரத போராட்டத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை பஸ்நிலையத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பாளையங்கோட்டையில் அம்மா உணவகத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
பாளையங்கோட்டையில் அம்மா உணவகத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.
2. பாளையங்கோட்டையில் பிளாஸ்டிக் பையில் உணவு பொதிந்து வழங்கிய கடைக்காரர்களுக்கு அபராதம்
பாளையங்கோட்டையில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பிளாஸ்டிக் பையில் உணவு பொதிந்து கொடுத்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட தொடங்கியது - மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க நடவடிக்கை
மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மார்க்கெட் நேற்று செயல்பட தொடங்கியது.
4. பாளையங்கோட்டையில் கொரோனா பீதிக்கு இடையே தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
பாளையங்கோட்டையில் கொரோனா பீதிக்கு இடையே தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
5. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு - டீன் ரவிச்சந்திரன் தகவல்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது என டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-