சோனியா, ராகுல்காந்தியிடம் காங்கிரஸ் மந்திரிகள் வாழ்த்து பெற்றனர்


சோனியா, ராகுல்காந்தியிடம் காங்கிரஸ் மந்திரிகள் வாழ்த்து பெற்றனர்
x
தினத்தந்தி 31 Dec 2019 10:45 PM GMT (Updated: 31 Dec 2019 7:46 PM GMT)

சோனியா காந்தி, ராகுல்காந்தியை நேரில் சந்தித்து மராட்டிய காங்கிரஸ் மந்திரிகள் வாழ்த்து பெற்றனர்.

மும்பை, 

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு அமைந்து ஒரு மாதத்துக்கு பிறகு நேற்றுமுன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 3 கட்சிகளை சேர்ந்த 36 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

காங்கிரஸ் சார்பில் அசோக் சவான், வர்ஷா கெய்க்வாட், விஜய் வடேடிவார், சுனில் கேதார், அமித் தேஷ்முக், யசோமதி தாக்கூர், கே.சி.பட்வி, அஸ்லாம் சேக், சாடேஜ் பாட்டீல், விஸ்வஜித் கதம் ஆகிய 10 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி ஏற்பின்போது, காங்கிரசை சேர்ந்த பாலசாகேப் தோரட், நிதின் ராவத் ஆகிய 2 பேரும் மந்திரி பதவி ஏற்று இருந்தனர். இதன் மூலம் மந்திரி சபையில் காங்கிரஸ் சார்பில் 12 மந்திரிகள் இடம்பெற்று உள்ளனர்.

அவர்கள் அனைவரும் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியாக அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

அப்போது மராட்டிய காங்கிரஸ் பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story