மாவட்ட செய்திகள்

குமரி சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் சர்வதேச சதி இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி + "||" + International conspiracy interviews head of state in the Kumari sub-inspector murder

குமரி சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் சர்வதேச சதி இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி

குமரி சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் சர்வதேச சதி இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
குமரி சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் சர்வதேச சதி இருக்கிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் கூறினார்.
களியக்காவிளை,

தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(வயது 57) கடந்த 8-ந்தேதி இரவு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், நேற்று களியக்காவிளை வந்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச சதி

தமிழகத்தில் சமீபகாலமாக பயங்கரவாதம் அதிகரித்து உள்ளது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது. எனவே திறமையான அதிகாரிகளை நியமித்து பயங்கரவாதத்தின் ஆணிவேரை கண்டுபிடித்து அகற்ற வேண்டும். இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பலூன் வியாபாரி கழுத்து அறுத்துக்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
திருச்சியில் இரவில் பலூன் வியாபாரி கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை
திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
3. களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்பு
களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்கப்பட்டது. பயங்கரவாதிகள் சாக்கடையில் வீசியதை போலீசார் தேடி கண்டுபிடித்தனர்.
4. சிவகாசி அருகே, பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வழக்கில் அசாம் வாலிபர் கைது
சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. 8 வயது சிறுமி கொலை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவர் கைது
சிவகாசியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.