மாவட்ட செய்திகள்

நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி + "||" + Woman kills woman with electricity in Namakiripettai

நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி

நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி
நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கடைவீதி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மனைவி தீபக்குமாரி (வயது 36). இவர் நேற்று மதியம் வீட்டில் துணி துவைத்து வழக்கம்போல மாடியில் உள்ள துணி காய வைக்கும் கம்பியில் காய வைத்துள்ளார்.


அப்போது அந்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தீபக்குமாரியை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணி காயவைக்கும் கம்பியில் அந்த வழியாக சென்ற மின்சார கம்பி உராய்ந்து மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2. மர்ம விலங்கு கடித்து குதறியதில் மேலும் ஒரு ஆடு பலி
ஜோலார்பேடடை அருகே மர்ம விலங்கு மீண்டும் கடித்து குதறியதில் 3 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதனால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
3. தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
4. போர்வெல் பழுதுபார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்
ஆம்பூர் அருகே போர்வெல் பழுதுபார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. மரத்தில் கார் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
மூலனூர் அருகே கார் மரத்தில் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலியானார். கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.