வாணியம்பாடியில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி; நண்பர் படுகாயம்


வாணியம்பாடியில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Jan 2020 3:45 AM IST (Updated: 29 Jan 2020 2:06 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் பசுலூர்ரகுமான். அவருடைய மகன் முகமதுஅலி (வயது 20). இவரும் அவரது நண்பர் பாபு (20) என்பவரும் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் ரோட்டில் வந்தபோது திடீரென குறுக்கே நாய் ஒன்று வந்து உள்ளது. அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்து இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே முகமதுஅலி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story