மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால் பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் வெடிக்கும் - பரமேஸ்வர் சொல்கிறார்


மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால் பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் வெடிக்கும் - பரமேஸ்வர் சொல்கிறார்
x
தினத்தந்தி 30 Jan 2020 4:45 AM IST (Updated: 30 Jan 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால், பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் வெடிக்கும் என்று பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவால், பா.ஜனதாவில் யாரையும் சமாதானப்படுத்த முடியவில்லை. சிலர் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று கேட்கிறார்கள். மற்ற சிலர் மந்திரி பதவியை வழங்குமாறு கேட்கிறார்கள். மந்திரி பதவி வழங்காவிட்டால் ராஜினாமா செய்வதாக கூறுகிறார்கள்.

அதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்தால், பா.ஜனதாவில் உட்கட்சி பூசல் வெடிக்கும். யார் போர்க்கொடி தூக்குவார்கள், யார் அமைதியாவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நாங்களும் அதற்காக காத்திருக்கிறோம். இதனால் காங்கிரசுக்கு பயன் கிடைக்கும்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் புதிய பெங்களூரு என்ற திட்டத்தை உருவாக்கினோம். அந்த திட்டத்தை பா.ஜனதா அரசு வாபஸ் பெற்றுள்ளது. இது வருத்தம் அளிக்கிறது. மக்கள் நலப்பணிகளை தடுப்பது சரியல்ல. எதிர்க்கட்சிகள் மீது கோபம் இருக்கலாம். திட்டத்திற்கு வேண்டுமானால் வேறு பெயரை சூட்டலாம்.

ஆனால் ஒட்டுமொத்தமாக திட்டத்தையே வாபஸ் பெறுவது சரியல்ல. எங்கள் மீதான கோபத்தை மக்களிடம் காட்ட வேண்டாம். காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை இந்த அரசு நிறுத்தக்கூடாது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story