தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்களிடம் மாநில தகவல் ஆணையர் நேரடி விசாரணை


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்களிடம் மாநில தகவல் ஆணையர் நேரடி விசாரணை
x

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தவர்களிடம் மாநில தகவல் ஆணையர் நேரடி விசாரணை நடத்தினார்.

திண்டுக்கல்,

அரசு அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல் களை பெறும் வகையில், மத்திய அரசால் தகவல் அறியும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது. தனிநபர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு அரசுத்துறை நிறுவனங்கள் குறித்த விவரங்கள் கேட்டு மனு செய்தால் உடனடியாகவோ அல்லது 30 நாட்களுக் குள்ளோ பதில் அளிக்க வேண்டும். அந்த பதில், மனுதாரருக்கு திருப்தி அளிப்பதாக இல்லையென்றால் அவர் மேல்முறையீடு செய்யலாம்.

இவ்வாறு மேல்முறையீடு செய்யப்படும் மனுக்களை மாநில தகவல் ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி தீர்வு அளிப்பார். அந்த வகையில் திண்டுக்கல், மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வருவாய்த்துறை, வேளாண்துறை, மாநகராட்சி, நகராட்சி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சமூகநலத்துறை, கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

நேரடி விசாரணை

இதற்கு மாநில தகவல் ஆணையர் முருகன் தலைமை தாங்கினார். அதையடுத்து மேல்முறையீடு செய்த மனுதாரர்களிடம் நேரடி விசாரணை நடத்தினார். கனிமவளம், வேளாண்மை, மாநகராட்சி ஆகியவற்றிடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கள் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த 14 பேரிடம் அவர் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதில் சில மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மனுதாரர் கோரிய விவரங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரிவிக்கும்படி அந்தந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் முருகன் உத்தரவிட்டார். மற்ற மனுக்கள் மீது உரிய பரிந்துரைகளை வழங்கினார்.

Next Story