நெல்லை-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம்


நெல்லை-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம்
x
தினத்தந்தி 7 Feb 2020 5:05 AM IST (Updated: 7 Feb 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி, மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நெல்லையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* நெல்லையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்:56822) திண்டுக்கல்-திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-மயிலாடுதுறை இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 10, 12, 14, 17, 19, 21, 24, 26 மற்றும் 28-ந் தேதி வரையிலும், மார்ச் மாதம் 2 மற்றும் 4-ந் தேதி வரையிலும் இயங்கும். அதே வேளையில் வழக்கமாக புறப்படும் நேரமான பிற்பகல் 1.40 மணிக்கு பதில் பிற்பகல் 2.50 மணிக்கு, அதாவது 70 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

* மயிலாடுதுறை-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்:56821) திருச்சி-திண்டுக்கல் இடையே இன்று (வெள்ளிக்கிழமை), 10,, 12, 14, 17, 19, 21, 24, 26, 28 மற்றும் மார்ச் மாதம் 2, 4-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சி-ராமேசுவரம்-திருச்சி பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்கள்:56829/56830) மானாமதுரை- ராமேசுவரம்- மானாமதுரை இடையே வருகிற 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை-தஞ்சை இடையே ரத்து

* நெல்லை-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்:56822) மயிலாடுதுறை-கும்பகோணம் இடையே ரத்து செய்யப்பட்டு, நெல்லை-கும்பகோணம் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை-செவ்வாய்க்கிழமை) நீங்கலாக இயங்கும்.

* மயிலாடுதுறை-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்:56821) மயிலாடுதுறை-கும்பகோணம் இடையே ரத்து செய்யப்பட்டு, கும்பகோணம்-நெல்லை இடையே 16, 17 மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் இயங்கும்.

* திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண்:56824) தஞ்சை-மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-தஞ்சை இடையே இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை இயங்கும்.

* மயிலாடுதுறை-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்:56821) மயிலாடுதுறை-தஞ்சை இடையே ரத்து செய்யப்பட்டு, தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு இன்று முதல் 15-ந் தேதிவரை இயங்கும்.

* திருச்சி-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்பட்டு, திருச்சி-கும்பகோணம் இடையே வருகிற 16, 17 மற்றும் 18-ந் தேதி ஆகிய நாட்களில் இயங்கும்.

தாமதமாக புறப்படும் ரெயில்கள்

* திருச்சி-சென்னை எழும்பூர் செல்லும் ரெயில் (வண்டி எண்:16796) வருகிற 11-ந் தேதி முதல் 29-ந் தேதிவரை, திருச்சியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 35 நிமிடம் தாமதமாக காலை 10.35 மணிக்கு புறப்பட்டு சென்னை செல்லும்.

* காரைக்குடி-திருச்சி டெமு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்: 76840) வருகிற 29-ந் தேதிவரை(ஞாயிற்றுக்கிழமை தவிர), காரைக்குடியில் காலை 9.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 1 மணி நேரம் தாமதமாக காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு பிற்பகல் 1 மணிக்கு வந்தடையும்.

* திருச்சி-மானாமதுரை டெமு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்: 76807), வருகிற 29-ந் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) திருச்சியில் காலை 10.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் தாமதமாக காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை செல்லும்.

இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story