மாவட்ட செய்திகள்

திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை + "||" + Police investigation into brokers' involvement in child sales case in Trichy

திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை

திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை
திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் ஒரு தம்பதியினர் ஒரு ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்து வருவதாகவும், மற்றொரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தையை வேறொருவருக்கு விற்றதாகவும் திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கும் தகவல் வந்தது.


இதையடுத்து போலீசாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் குழந்தைகளை வாங்க, விற்க புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் யார்?, குழந்தைகளை விற்றது எப்படி? என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் சிக்கினர்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். முழு விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விசாரணையில் உள்ள நபர்களின் விவரங்கள் தற்போது தெரிவிக்க இயலாது. நாளை (அதாவது இன்று) முழு விவரம் தெரிவிக்கப்படும்’ என்றார்.

இதற்கிடையில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் போலீசாரின் பிடியில் 2 பேர் இருப்பதாகவும், அவர்கள் புரோக்கர்கள் என கூறப்படுகிறது. 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2. தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிப்பு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
3. திருவாரூர் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு: 1,200 போலீசார் பாதுகாப்பு
144 தடை உத்தரவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4. திருப்பூரில் குடிபோதையில் தகராறு: கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திருப்பூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. கடத்தூர் அருகே சோகம் 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை போலீசார் விசாரணை
கடத்தூர் அருகே 1½ வயது பெண் குழந்தையுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.