தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சம்பள உயர்வு கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சம்பள உயர்வு கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 March 2020 4:30 AM IST (Updated: 11 March 2020 12:29 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சம்பள உயர்வு கேட்டு திருவாரூரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 250 நாட்களாக உயர்த்த வேண்டும். இந்த திட்டத்தில் சம்பளத்தை ரூ.600-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட செயலாளர் குமாரராஜா, மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அறிவிப்பு பலகை

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை 15 நாட்களில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு ஆண்டுக்கான வேலை தொகுப்பை ஊராட்சி அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும்.

வேலைக்கான மனுவை செவ்வாய்க்கிழமை தோறும் வாங்குவதை தமிழ்நாடு முழுவதும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட நிர்வாகி பழனிவேல், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, நிர்வாகிகள் மாரியம்மாள், சேகர், பாலைய்யா, சந்திரகாசன், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story