மாவட்ட செய்திகள்

சாலையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பு கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி + "||" + Residents on the roadside asked for protection and tried to block the governor's mansion

சாலையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பு கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி

சாலையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பு கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
சாலையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பு கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சின்னவாய்க்கால் வீதியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாலையோரம் வசித்து வருகின்றனர். இதில் ஆட்ேடா டிரைவர் ஒருவர் கடந்த 12-ந் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கில் நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிைல உருவானது. அவர்களை ஆட்டோ டிரைவரின் குடும்பத்தினர் கண்டித்தனர்.


இந்த நிைலயில் இறந்த ஆட்டோ டிரைவருக்கு அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் பூஜை செய்து வழிபட்டனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் மதுபாட்டில்களை அவர்கள் மீது வீசியதாக கூறப்படுகிறது. ஆனால் யார் மீதும் படவில்லை. மேலும் அங்கு நின்று கொண்டு இருந்த பெண்களை அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பாக பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.

இதற்கிடைேய அந்த கும்பல் மீண்டும் அங்கு சென்று அவர்களை மிரட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி நேற்று மாலை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் அங்கு சென்றனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் கவர்னர் மாளிகை எதிரில் பாரதி பூங்கா நுைழவாயில் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனே போலீசார் பாரதி பூங்காவின் நுழைவாயில் கேட்டை இழுத்து மூடினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். உங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தாக்கம் எதிரொலி: மாகியில் நாராயணசாமி ஆய்வு
கொரோனா தாக்கம் எதிரொலியாக மாகி பிராந்தியத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
2. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் பலி
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்த ரசிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் பலி
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் பலியாகி உள்ளனர்.
5. வேதாரண்யம் அருகே மீனவர்களிடையே மோதல்; 10 பேர் காயம்
வேதாரண்யம் அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர்.