குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: சேலத்தில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: சேலத்தில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2020 11:30 PM GMT (Updated: 18 March 2020 8:32 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி நேற்று சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அம்ஜத் தலைமை தாங்கினார். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் முழக்க போராட்டம் நடத்தி வரும் பெண்களும் ஊர்வலமாக வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் தொடரும்

இந்த போராட்டத்தின் போது பிரமாண்டமான தேசிய கொடியை பிடித்துக் கொண்டு முஸ்லிம்கள் நின்றனர். இதில் மாநில செயலாளர் முகமது கனி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழகத்தில் 36 இடங்களில் இன்று(நேற்று) சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்’ என்றார்.

Next Story