மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா + "||" + Corona for 23 people in a single day

ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை, 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் மராட்டியம் தான் கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

நேற்று முன்தினம் வரை இந்த கொடிய நோய்க்கு 74 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நோயின் தாக்கம் குறையாதா? என்று மக்கள் ஏங்கி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 23 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது. புதிய நோயாளிகளில் 17 பேர் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியிலும், 4 பேர் சாங்கிலி மாவட்டம் இஸ்லாம்பூர் தாலுகாவிலும், புனே மற்றும் சத்தாரா ஆஸ்பத்திரிகளில் தலா ஒருவரும்சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மராட்டியத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனாவுக்கு 30 பேர் பலி - 433 பேருக்கு பாதிப்பு
மும்பையில் கொரோனாவுக்கு இதுவரை 30 பேர்பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 433 ஆக உயர்ந்து உள்ளது.
2. மராட்டியத்தில் ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா - பாதித்தவர்கள் எண்ணிக்கை 416 ஆனது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்து உள்ளது.
3. மும்பை தாராவி பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
மும்பை தாராவி பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
4. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 16 ஆனது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் பலியானார்கள். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது.
5. மாநிலம் முழுவதும் 302 பேரை கொரோனா தாக்கியது மும்பை, தானேயில் 187 பேருக்கு பாதிப்பு - தடுப்பு பணியில் அரசு தீவிரம்
மராட்டியத்தில் 302 பேரை கொடிய கொரோனா தாக்கி இருப்பதாகவும், மும்பை, தானேயில் மட்டும் 187 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அரசு தெரிவித்து உள்ளது. இதையடுத்து நோய் தடுப்பு பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி உள்ளது.