கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருப்பரங்குன்றம் கோவில் பங்குனி பெருவிழா ரத்து


கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருப்பரங்குன்றம் கோவில் பங்குனி பெருவிழா ரத்து
x
தினத்தந்தி 27 March 2020 4:30 AM IST (Updated: 27 March 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பங்குனிபெருவிழா கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்படுகிறது. அதை அறிந்த பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதல்படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பங்குனி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

திருவிழாவின் 5-ம் நாள் பக்தர்களின் உள்ளங்கைகளில் சாமி எழுந்தருளக் கூடிய "கைப் பாரமும்", திருவிழாவின் 13-வது நாள் முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன், சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி முருகப் பெருமான் தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். அந்த நாளில் பக்தர்கள் திரளாககூடி தரிசனம் பெறுவார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மலையைச்சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் தேர்வலம் வரக்கூடிய மகா தேரோட்டம் நடைபெறும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வடம்பிடித்து தரிசனம் செய்வார்கள். அவை கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இத்தகைய பங்குனி பெருவிழா இந்த ஆண்டிற்கு நாளை (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 1I -ந் தேதி வரை நடத்துவதற்கு வழக்கம்போல அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்து வந்தது. அதன் முதல்கட்டமாக திருவிழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அதை உபயதாரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் வழங்கி வந்தது.

இந்த நிலையில் உலகத்தை உலுக்கும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி தவிர்க்கப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 31-ந் தேதி வரை கோவில் மூடப்பட்டது. இதற் கிடையில் திருவிழா கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்தது.

இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு திருவிழா தொடர்பாக நடந்த கூட்டத்தில் கோவிலுக்குள் ஆகம விதிப்படி தினமும் 8 கால பூஜை நடைபெற்று வருவது போலவே உள்திருவிழாவாக பங்குனி பெருவிழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதில் கொடியேற்றம், சாமி புறப்பாடு கோவிலுக்குள் நடத்துவது என்றும் அதில் பக்தர்கள், உபயதாரர்கள் பங்கேற்பதை தவிர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கொடிய நோய் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவுவதால் அதை அதே வேகத்தில் தடுக்கும் வகையில் கொரோனா வைரசிற்கு தற்காலிக மருந்து தனித்து இருக்க வேண்டும். கூட்டம் கூட கூடாது என்பதற்காக மக்கள் ஊரடங்கு இருப்பதால் இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா ரத்து செய்யப்படுவதாக வும், வழக்கம்போல பூைஜகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Next Story