மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்குதல் எதிரொலி: போலீசாருக்கு வழங்க முககவசம் தயார் செய்யும் பணி மும்முரம் + "||" + The echo of the coronation attack: The task of preparing a mask for the police

கொரோனா தாக்குதல் எதிரொலி: போலீசாருக்கு வழங்க முககவசம் தயார் செய்யும் பணி மும்முரம்

கொரோனா தாக்குதல் எதிரொலி: போலீசாருக்கு வழங்க முககவசம் தயார் செய்யும் பணி மும்முரம்
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக போலீசாருக்கு வழங்க முககவசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பல ஆயிரம் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். முதலில் சீனா நாட்டில் பரவிய இந்த வைரஸ் அதன் பின்னர் உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக இத்தாலி நாட்டில் இந்த வைரஸ் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டு, பஸ்கள், ரெயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தநிலையில் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான கடைகள் மற்றும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதையும் சிலர் மீறி பகல் நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். இதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாவட்டத்தில் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாகனங்களில் சாலைகளில் சுற்றித்திரிவோரின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து இவர்களை போலீசார் வழமறித்து நூதன முறையில் தண்டனை கொடுத்தும், சில இளைஞர்கள் கேட்பதாக இல்லை. இதையடுத்து அவர்களை போலீசார் வழிமறித்து சில ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.

இனியும் இதேபோல் செய்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தனர். இதுதவிர மாவட்டத்தில் ஏராளமான போலீசார் தற்போது இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

போதிய அளவில் அவர்களுக்கு முககவசம் இல்லாததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை பெண் போலீசார் மூலம் முககவசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
2. கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு
கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
3. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - எம்.எல்.ஏ. வேண்டுகோள்
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.
4. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் உதவி
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய வீராங்கனை சிந்து ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
5. துபாயில் இருந்து மதுரை வந்தவர்: கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்
துபாயில் இருந்து விமானத்தில் மதுரை வந்த வாலிபர், கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். அவர் திடீரென மாயமாகி தனது ஊருக்கு சென்று காதலியை நள்ளிரவில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடந்துள்ளது. போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து மீண்டும் முகாமில் தங்கவைத்தனர்.