அவினாசி அருகே 130 குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள்


அவினாசி அருகே 130 குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள்
x
தினத்தந்தி 15 April 2020 10:00 PM GMT (Updated: 15 April 2020 8:42 PM GMT)

அவினாசி அருகே கூலி வேலை பார்த்து வந்த 130 குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

அவினாசி, 

கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவினாசி ஊராட்சிக்கு உட்பட்ட அவினாசி லிங்கம்பாளையம் இந்திரா காலனியை சேர்ந்த கூலி வேலை பார்த்து வந்த 130 குடும்பத்தினர் வருமானமின்றி உணவு பொருட்கள் வாங்க முடியாமல் சாப்பிட வழியின்றி தவித்தனர்.

இதையறிந்து அந்த குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி, ½ லிட்டர் எண்ணெய், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர் பி.கோமதி, முன்னாள் தலைவர் டாக்டர் எம்.செந்தில்குமார், பழங்கரை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கி.கார்த்திகேயன் மற்றும் அவினாசி ஒன்றிய இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தம்பி என்ற ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர் சண்முகம், பெரியாயிபாளையம் சுரேஷ், தங்கராஜ் ,ஜெயபிரகாஷ், யுவராஜ் ஆகியோர் இணைந்து 130 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

Next Story