மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு: போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை + "||" + Hindu Front Siege of Police Station: Meenakshi Amman

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு: போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு: போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு: போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை.
குள்ளனம்பட்டி,

இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சமூக இடைவெளியுடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் குறித்து இந்து முன்னணி மண்டல செயலாளர் சங்கர் கணேஷ் கூறுகையில், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் முகநூலில் அவதூறாக பதிவு செய்துள்ளார். அவர் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குள் இருப்பதால், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக்கோரி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளோம் என்றார்.


இதையடுத்து புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், அருண் நாராயணன் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக பாலகிருஷ்ணாபுரம் ராமசாமி காலனியை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி கூட்டுறவு சங்க அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தியாகதுருகம் அருகே ரேஷன் பொருட்கள் வழங்கக்கோரி கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை
சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை.
3. சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகை
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
4. நிவாரணத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
நிவாரணத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை சேலத்தில் பரபரப்பு.
5. மதுரை செல்லூரில் மதுக்கடையை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸ் தடியடி - 20 பேர் கைது
மதுரை செல்லூரில் மதுக்கடையை மூடக்கோரி முற்றுகையிட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியதுடன், 20 பேரை கைது செய்தனர்.