கோவில்பட்டியில் 1,200 பேருக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் 1,200 பேருக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 25 May 2020 12:00 AM GMT (Updated: 24 May 2020 6:49 PM GMT)

கோவில்பட்டியில் 1,200 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர். கோவில்பட்டி புதுகிராமம் முகமதுசாலிஹாபுரம் பள்ளிவாசலில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து 500 ஏழைகளுக்கு புத்தாடைகள், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பந்தல் அமைப்பாளர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு அரிசி வழங்கினார். தொடர்ந்து கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப்பள்ளி செயலாளர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில், அங்கு பயிலும் 600 மாணவ-மாணவிகளுக்கு அரிசி வழங்கினார்.

அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story