மாவட்ட செய்திகள்

தேனியில் இருந்து பீகார் தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர் + "||" + From the theni 120 Bihar workers were sent home

தேனியில் இருந்து பீகார் தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்

தேனியில் இருந்து பீகார் தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்
தேனி மாவட்டத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 4,125 பேர் தங்கி இருந்தனர். அவர்களில் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 180 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், பீகார் மாநிலத்தை சேர்ந்த 256 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 24 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். 4-வது கட்டமாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 688 பேர் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 5-வது கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 120 பேர் நேற்று தேனியில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேனியில் இருந்து 4 பஸ்களில் அவர்கள் மதுரை ரெயில் நிலையத்துக்கு சென்றனர். அங்கிருந்து ரெயில் மூலம் பீகாருக்கு புறப்பட்டனர். அவர்களை வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் தேனியில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனியில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
2. தேனி, கம்பத்தில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் உழவர் சந்தை
தேனி, கம்பம் நகரில் அடிப்படை வசதிகள் இன்றி தற்காலிக உழவர் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.
3. தேனியில் இருந்து ராஜஸ்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தேனி மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4. தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள்
தேனி மாவட்டத்தில் தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5. தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு
தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.