நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா: பூஜை செய்யும் 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழாவையொட்டி 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்திருமஞ்சனம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்தி கேயன், நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், டாக்டர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாஸ், நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் விசுமகாஜன் பேசியதாவது:-
அனுமதி கிடையாது
கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் குறைந்த நபர்களை கொண்டு நடராஜருக்கு பூஜை செய்ய வேண்டும்.
பூஜைக்கு செல்லும் தீட்சிதர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் யாரேனுக்கும் கொரோனா தொற்று உறுதியானால், அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.
மேலும் பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார் கள். மேலும் டாக்டர்கள், மாவட்ட நிர்வாகம் கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து நடராஜருக்கு பூஜை செய்ய கோவிலுக்கு செல்லும் 150 தீட்சிதர்கள் பெயர் பட்டியல் சப்-கலெக்டரிடம் வழங் கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கோவி லிலேயே 150 தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக உமிழ்நீர் எடுக்கப்பட்டது.

Related Tags :
Next Story