மாவட்ட செய்திகள்

ரூ.5,450 கோடி கடன் வழங்க இலக்கு வங்கிகளின் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் தகவல் + "||" + Collector reports on the release of project proposals by target banks to provide Rs 5,450 crore loan

ரூ.5,450 கோடி கடன் வழங்க இலக்கு வங்கிகளின் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் தகவல்

ரூ.5,450 கோடி கடன் வழங்க இலக்கு வங்கிகளின் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.5,450 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடப்பாண்டிற்கான (2020-2021) வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டார். அதனை திருவண்ணாமலை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜாராமன் பெற்றுக் கொண்டார்.


பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

நபார்டு வங்கி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடப்பாண்டில் ரூ.5,450 கோடிக்கு கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி விவசாய கடன்களாக ரூ.4 ஆயிரத்து 486 கோடியே 65 லட்சம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.290 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி கடனாக ரூ.60 கோடியே 75 லட்சம், வீட்டு கடனாக ரூ.302 கோடியே 50 லட்சம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்களுக்கு ரூ.9 கோடியும், சமூக உள்கட்டமைப்பு கடன்களுக்கு ரூ.31 கோடியும், இதர துறைகளுக்கு ரூ.270 கோடியே 10 லட்சம் கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டறிக்கை

அதைத்தொடர்ந்து இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய 2019-2020-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையையும் கலெக்டர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மகளிர் திட்ட உதவி இயக்குனர் ஜான்சன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுந்தரவதனம், தாட்கோ திட்ட மாவட்ட மேலாளர் ஏழுமலை, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் மந்தாகினி மற்றும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் சம்பவம் பற்றி அவதூறு தகவல் சென்னையில், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் அதிரடி நடவடிக்கை
சாத்தான்குளம் சம்பவம் பற்றி முகநூலில் அவதூறு தகவல் வெளியிட்ட போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
2. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 100 படுக்கைகள் கண்காணிப்பு அதிகாரி தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 100 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மகேசன் காசிராஜன் கூறினார்.
3. அரியலூர் மாவட்டத்தில் 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை கண்காணிப்பு அதிகாரி தகவல்
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 6,597 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார்.
4. நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர்; சுகாதார அமைச்சகம் தகவல்
நாட்டில் 8 மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 85.5% பேர் உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
5. கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் எடப்பாடி பழனிசாமி தகவல்
கொள்ளிடம் கதவணை கட்டுமான பணி வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.