மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது + "||" + The Task Shop near the country was temporarily closed due to the outbreak of coronavirus

கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது
கொரோனா தொற்று பரவுவதால் ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தொண்டராம்பட்டு கிழக்கு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட வேண்டும் எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த 50 பெண்கள் உள்பட கிராம மக்கள் நேற்று சம்மந்தப்பட்ட மதுபான கடைக்கு சென்று ஊழியர்களிடம் கடையை திறக்ககூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.


தற்காலிகமாக மூடப்பட்டது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரெத்தினம், ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடவேண்டும் என்று கிராம மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுமாறு ஊழியர்களை அறிவுறுத்தினர். மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்று கிராம மக்களிடம் அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த டாஸ்மாக் கடை நேற்று முழுவதுமாக மூடப்பட்டது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பூதலூர் காவிரி கரையோர பகுதிகளில் இறால் பண்ணைகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
பூதலூர் காவிரி கரையோரம் பகுதிகளில் இறால் பண்ணைகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்றும் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
2. அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை.
3. கல்பட்டு கிராமத்தில் நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கல்பட்டு கிராமத்தில் சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது.
4. பாதையை அடைத்ததால் வரைபடத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்து கிராம மக்கள் மனு
கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சியை அடுத்த கடமன்ரேவு கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கிராம வரைபடத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
5. புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைந்திருந்தது.