அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி; கடைகளை அடைக்க உத்தரவு


அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு முதல் பலி; கடைகளை அடைக்க உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2020 7:47 AM IST (Updated: 10 July 2020 7:47 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் நகரில் பூக்கடை வைத்திருந்த ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அரியலூர்,

கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு முடிவு வராத நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவரின் முதல் உயிரிழப்பு இதுவாகும்.

இதனையடுத்து அவர் வசித்த தெரு மற்றும் அவரது பூக்கடை இருந்த பகுதி ஆகிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகளை அடைக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இப்பகுதியில் கடைகளை திறக்கவும், பொதுமக்கள் நடமாட்டம் இருப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Next Story