திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது


திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2020 5:55 AM IST (Updated: 11 July 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பூங்கா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). இவர் அப்பகுதியில் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரது நிறுவனத்தின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த செல்போனையும், வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த லோகநாதன் (23), சூர்யா (20), வளர்மதி (25), சந்தோஷ் (30) உள்பட 5 பேரை கைது செய்தனர். கைதான 5 பேரும் வேப்பம்பட்டை சேர்ந்த அரிதாஸ் (50) என்பவரிடம் கத்திமுனையில் 1 பவுன் மோதிரம், ரூ.18 ஆயிரமும், வெள்ளவேட்டில் பூவரசன் என்பவரை தாக்கி செல்போன் மற்றும் ரூ.2,500ஐயும் பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

Next Story