சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து 27 பேர் மீண்டனர்: புதிதாக 12 போலீசாருக்கு தொற்று


சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து 27 பேர் மீண்டனர்: புதிதாக 12 போலீசாருக்கு தொற்று
x
தினத்தந்தி 12 July 2020 4:45 AM IST (Updated: 12 July 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து 27 பேர் மீண்டுள்ளனர். மேலும் புதிதாக 12 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 12 பேர் கொரோனா பிடியில் சிக்கினர். இதையடுத்து கொரோனா பாதிப்பு 1,415 ஆக உயர்ந்தது.

கொரோனா தாக்குதல் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் போலீசார் குணம் அடைந்து வருகிறார்கள். அதன்படி சைதாப்பேட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்பட 27 பேர் நேற்று குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது சென்னை போலீஸ்துறையில் குணம் அடைந்து பணிக்கு திரும்பிய போலீசாரின் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story