மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 July 2020 8:25 AM IST (Updated: 13 July 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது20).


திருத்துறைப்பூண்டி,

முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய மணிகண்டன் முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் தந்தை திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி, ஏட்டு ராஜம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Next Story