போரூர் போலீஸ் உதவி கமிஷனருக்கு கொரோனா
போரூர் போலீஸ் உதவி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை போரூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக்காவலர் ஆகியோர் கொரோனா சிகிச்சை முடிந்து நேற்று பணிக்கு திரும்பினர். அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து, ஆரத்தி எடுத்து மேள, தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் போரூர் உதவி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் போலீசார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டவர்களில் ஏற்கனவே 610 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது முகாமில் தங்க இருந்தவர்களில் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த 4 பேருக்கும், ஓமன் மற்றும் குவைத்தில் இருந்து வந்த தலா 2 பேருக்கும், ஜெர்மனி, சவுதி அரேபியா, இங்கிலாந்து, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்களில் மேலும் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்தது.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று 21 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 136 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 36 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 51 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
Related Tags :
Next Story